சத்தமில்லாமல் நடந்து முடிந்த ஆர்யா-சாயிஷா சங்கீத் – நாளை திருமணம்!

நடிகர் ஆர்யா – சாயிஷா திருமணம் நாளை நடைபெற இருக்கிறது. அதையொட்டி நேற்று சங்கீத் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றுள்ளது. சாயிஷா பிரபல பாலிவுட் பழம்பெரும் நடிகர் திலீப்குமாரின் பேத்தி என்பதால், பாலிவுட் பிரபலங்களும் இந்தத் திருமணத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உள்பட பல திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். இன்று மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து நாளை திருமணம் நடைபெறுகிறது. இதில் தமிழ்த் திரையுலகப் பிரபலங்களும் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.