Cine Bits
சத்தமில்லாமல் முன்னணி நடிகையாக வளரத் துவங்கும் ரீத்து சர்மா !

தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டா உடன் நடித்த பெல்லி சூப்புலு என்ற படம், ரிது வர்மாவை பரபரப்பான நடிகையாக்கியது. அதோடு ஆந்திர அரசின் நந்தி விருதும் கிடைத்தது. அந்த படத்தைப் பார்த்து தான் தமிழில் இருந்து கவுதம் மேனன் அவரை துருவ நட்சத்திரம் படத்திற்காக ஒப்பந்தம் செய்தார். அதையடுத்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்காக தேசிங்கு பெரியசாமியும் ரிதுவை ஒப்பந்தம் செய்தார். இதில் துருவநட்சத்திரம் கிடப்பில் கிடக்கும் நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் சமீபத்தில் வெளியானது. அதையடுத்து, தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வேண்டும் என்பதற்காக தற்போது தீவிரமாக கதை கேட்டு வருகிறார் ரிது வர்மா. குறிப்பாக, தெலுங்கு சினிமாவில் இருந்து ராஷி கண்ணா, ராஷ்மிகா போன்ற நடிகைகள் தமிழில் தீவிர பட வேட்டை நடத்துவதைத் தொடர்ந்து இப்போது ரிது வர்மாவும் முன்னணி ஹீரோக்களின் படங்களை கைப்பற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறார்.