சத்தமில்லாமல் வளர்ந்துவரும் பவனி ஷங்கர் !

சத்தமில்லாமல் படுவேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறார் ப்ரியா. கமல், விக்ரம் என்று முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். முன்னதாக ப்ரியா எஸ்.ஜே. சூர்யாவுடன் சேர்ந்து நடித்த மான்ஸ்டர் படம் சூப்பர் ஹிட்டானது. ஷங்கர் உலக நாயகன் கமல் ஹாஸனை வைத்து எடுக்கும் இந்தியன் 2 படத்தில் ப்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ப்ரியாவின் கதாபாத்திரம் படம் முழுக்க வருமாம். ப்ரியா அடுத்த மாதம் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம். இதையடுத்து இமைக்கா நொடிகள் படம் புகழ் அஜய் ஞானமுத்து சீயான் விக்ரமை வைத்து படம் ஒன்றை இயக்குகிறார். தற்போதைக்கு விக்ரம் 58 என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் சீயானுக்கு ஜோடியாகிறார், மேலும், ப்ரியா விஷ்ணு விஷாலுடன் சேர்ந்து இன்று நேற்று நாளை 2 படத்திலும் நடிக்கிறார் ப்ரியா பவானி சங்கர்.