சத்தியராஜ் தென்னிந்தியாவின் அமிதாப்பச்சன் – P.வாசு புகழாரம் !

இயக்குனர் பி.வாசு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். இவர் நேற்று நடந்த சிபிராஜின் வால்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து படத்தை பற்றிய தன் கருத்தையும் மற்றும் பல சுவாரஸ்யமான விசயங்களையும் பகிர்ந்து கொண்டார். வால்டர் படத்திற்கும் பி.வாசுவுக்கும் ஒரு சுவாரஸ்யமான தொடர்பு இருக்கிறது. அது பி.வாசு அவர்கள் இயக்கத்தில் உருவாகிய சத்யராஜ் கதாநாயகனாக நடித்து மாபெரும் வெற்றி அடைந்த படம் தான் வால்டர் வெற்றிவேல். இந்த படம் 1993ல் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது. வால்டர் வெற்றிவேல் படத்தின் முதல் காட்சியை ரஜினிகாந்த் கிளாப் தட்டி ஆரம்பித்தாகவும் பிரபு அவர்கள் கேமரா ஸ்விட்ச் ஆன் செய்ததாகவும் விஜயகாந்த் இயக்கியதாகவும் படத்தின் முதல் வசனமே வால்டர் வெற்றிவேல் எனும் சிங்ககுரலில் சத்யராஜ் பேசியதை இன்றும் மறக்கவில்லை என பி.வாசு அவர்கள் நினைவுகூறினார்.