சந்தனத்தின் ‘அக்யூஸ்டு நம்பர் 1’ பட பிரஸ்ட் லுக் போஸ்டர் !

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய ‘தில்லுக்கு துட்டு 2’ படத்திற்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அவரது நடிப்பில் அடுத்ததாக சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்கணும், மன்னவன் வந்தானடி உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. இந்த நிலையில், சந்தானத்தின் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜான்சன்.கே இயக்கும் இந்த படத்திற்கு ஏ1 (அக்யூஸ்டு நம்பர் 1) என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ள தாரா அலிசா பெர்ரி நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார். லியோ ஜான் பால் படத்தொகுப்பை கவனிக்க, ஹரி தினேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் எஸ்.ராஜ் நாராயணன் இந்த படத்தை தயாரிக்கிறார்.