சந்தானம் – யோகி பாபு இணையும் டகால்டி !

காமெடி நடிகராக இருந்து முன்னணி நடிகராக உயர்ந்திருக்கும் சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான 'தில்லுக்கு துட்டு 2' படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்த நிலையில், சந்தானம் தற்போது புதுமுக இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் அக்யூஸ்டு நம்பர் 1 என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த நிலையில், ஷங்கரின் முன்னாள் உதவியாளரான விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியிருக்கிறது. இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க யோகி பாபு ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்திற்கு 'டகால்டி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.