“சந்திரஹாசன் கனவில் பாதியைக் கூட நான் நிறைவேற்றவில்லை!” ட்விட்டரில் கமல் உருக்கம்

நடிகர் கமல்ஹாசனின் சகோதரரும், தயாரிப்பாளருமான சந்திரஹாசன் உடல்நலக் குறைவால் லண்டனில் காலமானார். மாரடைப்பு காரணமாக  திடீரென காலமானதால் அவரின் குடும்பமே துயரத்தில் உள்ளது. தன் அண்ணன் சந்திரஹாசன் கண்ட கனவில் பாதியை கூட தான் நிறைவேற்றவில்லை என கமல்ஹாசன் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். அவர் சகோதரர் மட்டுமல்ல நண்பனாய், தகப்பனுமாய் இருந்தார் என கமல் ட்விட்டரில் கூறியுள்ளார்.

கமல் கூறியிருப்பதாவது “நண்பனாய் நல்லாசானாய், தமயனும் தகப்பனுமாய் அவரை பெற்றதால் உற்றது நல் வாழ்வு. எனக்காக அவர் கண்ட கனவுகளில் பாதியைக் கூட நான் நிரைவேற்றவில்லை.”