சந்தீப் கிஷன், ஹரீஷ்கல்யாண், சாந்தனு இணையும் படம்சிம்புதேவன் டைரக்‌ஷனில்,’கசட தபற’

வடிவேலுவே கதாநாயகனாக நடிப்பதாக இருந்த 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' தாமதமானதால் சிம்பு தேவன் தனது அடுத்த படத்தை துவங்கி விட்டார். படத்துக்கு, `கசட தபற' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில் சந்தீப் கிஷன், ஹரீஷ்கல்யாண், சாந்தனு உள்பட பல கதாநாயகர்கள் இணைந்து நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ரெஜினா, பிரியா பவானி சங்கர், விஜயலட்சுமி ஆகியோர் நடிக்கிறார்கள். திரைக்கதை 6 பகுதிகளாக பிரிக்கப் பட்டுள்ளன. 6 ஒளிப்பதிவாளர்கள், 6 இசையமைப்பாளர்கள் இடம்  பெறுகிறார்கள். டைரக்டர் வெங்கட்பிரபு, டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.