சன்னிலியோனுக்கு பதிலாக ஷ்ரத்தா தாஸ்!

விஷால் நடித்து வரும் ‘அயோக்யா’ படத்திற்காக ஒரு கிளப் பாடலில் நடனம் ஆடுவதற்காக ஷ்ரத்தா தாஸ் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். இந்த பாடலில் முன்னதாக சன்னி லியோன் ஆடுவதாக இருந்தது அவருக்கு பதிலாக ஷ்ரத்தா ஆடி இருக்கிறார். தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், வங்காளம் என்று பல படங்களில் நடித்த ஷ்ரத்தா தாஸ் தற்போது சில நாட்களாக சென்னையில் இருக்கிறார். இந்த பாடலுக்கு சாம் சிஎஸ் இசை அமைத்துள்ளார். பாடல் வரிகளை ரோகேஷ் எழுதியுள்ளார். நடன இயக்குனராக பாபா மாஸ்டர் பணிபுரிகிறார். கிளப் போன்று அமைக்கப்பட்ட அரங்கில் இந்த பாடல் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலில் விஷால், ஷ்ரத்தா இருவரும் ஆடியுள்ளனர். இந்த பாடலின் படப்பிடிப்பு பணிகள் 2 நாட்களாக நடந்தன. வெங்கட் மோகன் இயக்கி வருகிறார்.