சன் பிச்சர்சின் தூண்டிலில் ரஜினியை தொடர்ந்து சிக்கிய தனுஷ் !

 தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்தப் படத்துக்கு முன் வெளியான அசுரன் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றதோடு வசூலிலும் சாதனை படைத்தது. அசுரன் படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வந்தார் தனுஷ். அதைத்தொடர்ந்து பரியேறும் பெருமாள் பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார். இதனிடையே துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் தனுஷின் 44-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பேட்ட படத்தை அடுத்து ரஜினிகாந்தின் 168-வது படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக தனுஷ் படத்தைத் தயாரிக்கிறது.