சமகால அரசியலை பிளந்து கட்டியிருக்கும் ஆர்.ஜே.பாலாஜியின் ‘எல்.கே.ஜி’ ட்ரைலர்!

நகைச்சுவை பாத்திரங்களில் நடித்துவந்த ஆர்.ஜே.பாலாஜி முதன்முறையாக கதாநாயகனாக நடித்துவெள்ளியாகவுள்ள படம் எல்.கே.ஜி. இப்படத்தின் ட்ரைலர் தற்சமயம் வெளியாகியுள்ளது. புதிய இயக்குனர் கே.ஆர்.பாபு இயக்க பிரியாஆனந்த் கதாநாயகியாக நடிக்க, ஜே.கே.ரித்திஷ், மயில்சாமி மற்றும் சந்தானபாரதி ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். சமகால அரசியலை நையாண்டியாக பதிவு செய்து படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். முன்னாள் அமைச்சர் நாஞ்சில் சம்பத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.