Cine Bits
சமந்தாவின் ஷாக்கிங் புகைப்படம்!

சூர்யா, விஷால், பரத், அருண் விஜய் என தமிழ் சினிமா நடிகர்கள் பலர் சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார்கள். ஏன், காமெடி நடிகர் சூரி கூட சிக்ஸ் பேக் வைத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார். ஆனால், சிக்ஸ் பேக் வைப்பதற்காக மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடுகளால் உடம்பு பலவீனமாகிவிடுவதால், சிக்ஸ் பேக் யாரும் வைக்க வேண்டாம், என்று நடிகர் சூர்யாவே ரசிகர்களுக்கு அறிவுரை கூறினார். இதை தொடர்ந்து கோலிவுட் நடிகர்களிடம் இருந்த சிக்ஸ் பேக் மோகம் மறைந்துவிட்ட நிலையில், தற்போது கோலிவுட் முன்னணி நடிகையான சமந்தா, சிக்ஸ் பேக் வைத்து அனைவருக்கும் ஷாக் கொடுத்திருக்கிறார். அவ்வபோது உடற் பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் சமந்தா, தனது சிக்ஸ் பேக் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.