சமந்தாவைவிட தீபிகா படுகோனே நடித்தால் பொருத்தமாக இருக்கும் – பி.வி.சிந்து !

சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் நடந்த சர்வதேச பேட்மிண்டன் விளையாட்டுபோட்டியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்துடன் தங்கப்பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. சிந்து கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவிடம் பட தயாரிப்பாளர்கள் பேசினர். அவரும் நடிக்க கிரீன் சிக்னல் காட்டியிருக்கிறார். தனது வாழ்க்கை வரலாறு படத்தில் சமந்தா நடிப்பதற்கு பி.வி.சிந்து வாழ்த்தும், நன்றியும் தெரிவிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் மாறுபட்ட கருத்து கூறி அதிர்ச்சி தந்திருக்கிறார். ‘உங்கள் வாழ்க்கை கதையில் யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும்’ என்று பி.வி.சிந்துவிடம் கேட்டபோது,’எனது வாழ்க்கை கதையில் சமந்தாவைவிட தீபிகா படுகோன் நடித்தால் பொருத்தமாக இருப்பார். ஏனென்றால் அவரும் ஒரு பேட்மிண்டன் வீராங்கனை. ஆனாலும் எனது கதாபாத்திரத்தில் யார் நடிக்க வேண்டும் என்பதை படம் தயாரிப்பாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்’ என தெரிவித்தார்.