சமந்தியாகபோகும் மோகன்லால் இயக்குனர் ப்ரியதர்ஷன் !

நடிகை லிசி, இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி. இவர் 2 வருடத்துக்கு முன்புதான் நடிக்க வந்தார். ‘ஹலோ’ தெலுங்கு படத்தில் அறிமுகமானவர் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். தமிழில், சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹீரோ படத்தில் நடிக்கிறார். கல்யாணியும், நடிகர் மோகன்லால் மகன் பிரணவும் சிறுவயது முதலே பழகி வருகின்றனர். சிறுவயது நட்பு வாலிப வயசானதும் காதலாக மாறியிருக்கிறது என்று செய்தி பரவுகிறது. பிரணவும் தற்போது படங்களில் நடித்து வருகிறார். கல்யாணி தந்தையும் இயக்குனருமான பிரியதர்ஷன், நடிகர் மோகன்லால் இருவரும் உயிர் நண்பர்கள். பிரியதர்ஷன் இயக்கத்தில் பல்வேறு படங்களில் மோகன்லால் நடித்திருக்கிறார். இரண்டு குடும்பத்தினரும் அவ்வளவு நெருக்கும்.