சமுத்திரக்கனியுடன் ஜோடி சேரும் சிவகார்த்திகேயன் கதாநாயகி !

2003-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுப்ரமணியம்சிவா. அதன்பின் பொறி, யோகி, சீடன் என்ற படங்களை இயக்கியவர், வடசென்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார். சின்ன இடைவெளிக்குப் பின் சமுத்திரகனியை நாயகனாக வைத்து இவர் இயக்கியிருக்கும் படம் வெள்ளை யானை. இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக இணையவுள்ளார் என அறிவித்துள்ளது படக்குழு. ‘மனம் கொத்திப் பறவை’ ஆத்மிகா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். வைட் லாம்ப் டாக்கீஸ் சார்பில் எஸ். வினோத் குமார் தயாரிக்கிறார்.