சமூகவலைத்தளத்தில் தன்னை இணைத்து கொண்ட மும்தாஜ் !

இன்றோடு பிக்பாஸ்ஸில் தன்னுடைய பயணம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், 'பிக் பாஸ்' பயணம் தொடங்கியது பற்றியும், அதன் மூலமாக தமிழக மக்கள் கொடுத்திருக்கும் வரவேற்பு பற்றியும் பேசி ஒரு வீடியோவாக எடுத்து அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் நான் இந்த தேதியில் தான் முதல்முதலாக தொலைக்காட்சி மூலமாக உங்கள் வீட்டுக்குள் வந்தேன். நீங்கள் எல்லாரும் உங்களோட மனசுக்குள் எனக்கு இடம் கொடுத்திருக்கீங்க. உங்களோட பிரார்த்தனைகள் தான் என்னை அந்த வீட்டில் தங்க வைத்தது. நான் சந்தோஷமாக இருந்தப்போ நீங்க சந்தோஷமாக இருந்தீங்க. நான் வருத்தப்பட்டப்போ நீங்களும் என் குடும்பத்தில் ஒருத்தராக நின்னு எனக்காக வருத்தப்பட்டீங்க. நான் எவ்வளவு சந்தோஷமாக இருக்கேன்னு சொல்றதுக்கு வார்த்தைகள் இல்லை. நான் இத்தனை வருஷமா சினிமா வாழ்க்கையில் எந்த சமூகவலைதளத்திலும் என்னை இணைச்சுக்கிட்டது கிடையாது. ஆனால் இப்போ உங்களில் ஒருத்தியாக என்னை மாத்திக்கிறதுக்காக சமூக வலைதளங்களிலும் என்னை இணைச்சிருக்கேன் என நன்றி தெரிவித்திருக்கிறார் மும்தாஜ்.