சமூக அக்கரையுடன் விஜய் சேதுபதி EPS-OPS -க்கு கோரிக்கை!

விஜய் சேதுபதி தமிழ் திரையுலகில் சிறந்த படங்களை தோ்ந்தெடுத்து நடித்து வருகிறாா்.  மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் இருந்துவருகிறார். இந்நிலையில் இவரை சமீபத்தில் ஒரு பத்திரிக்கை சிறந்த டாப் 10 மனிதர்களில் ஒருவராக தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த விருதை பெற்ற விஜய் சேதுபதியிடம் EPS-OPS பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு விஜய் சேதுபதி ‘நான் தேனியில் படப்பிடிப்பில் இருந்தேன், அந்த படப்பிடிப்பு முடிந்து ஊர்க்கு திரும்பும் போது பல மலைகளை வெட்டியுள்ளது தெரிய வந்தது, அதை பார்க்கும் போது மிகவும் கஷ்டமாக இருந்தது, இயற்கை வளங்களை அழித்து மக்களுக்கு என்ன நல்லது செய்துவிட முடியும் இந்த நிகழ்வை அவர்கள் பார்த்துக்கொண்டு இருந்தால், தயவுசெய்து இதை தடுத்து நிறுத்த வேண்டுகின்றேன்’ என் கோரிக்கை வைத்தார்.