சமூக கருத்து சொல்லும் படங்களை என்னால் இயக்க முடியாது – சுந்தர். சி!

விரைவில் வெளியாக உள்ள 'நட்பே  துணை' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் சுந்தர்.சி. 'மீசையை முறுக்கு, 'நட்பே துணை; போன்ற சமூக கருத்துக்களை கூறும் படங்களை என்னால் இனிமேல் இயக்க முடியாது. அப்படியே நான் இயக்கினால் அது கமல் நடிப்பில் நான் இயக்கி இருந்த 'அன்பே சிவம்' போல் ஆகிவிடும். அதனால் தான் இதுமாதிரி கருத்து சொல்லும் படங்களை தயாரித்து வருகிறேன். ஒருவேளை ஆதி தன்னுடைய தயாரிப்பில் முதல் முதலாக நடித்த, 'மீசையை முறுக்கு' திரைப்படம் தோல்வி அடைந்தாலும் மீண்டும் ஆதியை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என நானும் எனது மனைவி குஷ்புவும் முடிவு செய்திருந்தோம். ஆனால் அந்த படம் நல்ல வெற்றியை கொடுத்தது. இந்த நிலையில் அதேபோல் நல்ல கருத்து கூறும் கதையான 'நட்பே துணை' கதையை ஆதி என்னிடம் கூறினார். இந்த படத்தின் பட்ஜெட் கொஞ்சம் அதிகமானாலும் ஸ்கிரிப்ட் மேல் உள்ள நம்பிக்கையால் தயாரிக்க ஒப்புக்கொண்டேன்' என்று சுந்தர் சி தெரிவித்தார்.