சமூக சேவையில் ஆர்வம் காட்டும் சாக்ஷி அகர்வால் !

திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் அவ்வப்போது தலையை காட்டினாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பலராலும் அறியப்பட்ட சாக்ஷி அகர்வால் நடிப்பதில் மட்டுமல்ல சமூக சேவையிலும் அதிக ஆர்வம் காட்டுகிறார். இது குறித்து அவர் கூறியதாவது, ஆட்டிசம் குறைபாடு உடைய குழந்தைகள் இல்லத்திற்கு சென்று அங்குள்ள குழந்தைகளுடன் சிலமணி நேரங்களை செலவிட்டேன், இந்தியாவில் 1000 த்திற்கு, 9 குழந்தைகள் இக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை சந்தித்த பொழுது அவர்களது கள்ளம்கபடமற்ற அன்பில் கரைந்து போனேன். ஆட்டிசம் என்ற மணலை குறைபாடு என பலர் நினைக்கின்றனர். இது ஒரு குறைபாடுதானே தவிர, நோய் அல்ல என சாக்ஷி அகர்வால் கூறுகிறார்.