சமூக வலைத்தளத்தில் பிரியா பவானி சங்கர் பெயரில் மோசடி

சமீப காலமாக வலைத்தளத்தில் நடிகைகள் பெயரில் பல போலி கணக்குகள் முளைத்து வருகின்றன. அதில் குறிப்பிட்ட நடிகைகள் பேசுவதுபோலவே கருத்துகளை பதிவிடுகிறார்கள். அதை உண்மை என்று நம்பி ரசிகர்களும் பின்தொடர்கிறார்கள். இப்போது நடிகை பிரியா பவானி சங்கரும் போலி கணக்கு கும்பல் பிடியில் சிக்கி உள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள பிரியா பவானி சங்கர், போலி கணக்கு தொடங்கிய உங்கள் ஆர்வத்தை என்னால் புரிய முடிகிறது. எனக்கு தொல்லை கொடுப்பதை உங்கள் வேலையாக வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.