சமூக வலைத்தளத்தில் முதலிடத்தில் இலியானா !

சினிமாவை பற்றி தெரிந்துகொள்ள ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் இருப்பதால், நடிகைகள் திரைப்படங்கள் சம்பந்தப்பட்ட தகவல்களை இவற்றில் பதிவிடுகின்றனர். இதற்காக ரசிகர்களும் அவர்களை வலைத்தளத்தில் பின்தொடர்கின்றனர். இதில் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, பிரீத்தி ஜிந்தா, தபு உள்ளிட்ட அனைவரையும் பின்னுக்கு தள்ளி இலியானா முதல் இடத்தில் இருக்கிறார். இலியானா பற்றிய தகவல்களை அறியத்தான் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்று சமீபத்தில் எடுத்த சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளது. இலியானா சமீப காலமாக படங்களில் நடிக்கவில்லை. ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் அவரது மவுசு குறையவில்லை என்பதை சர்வே மூலம் அறிய முடிகிறது. இலியானா, தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு இந்திக்கு போய் குறிப்பிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.