சம்பளத்தை உயர்த்திய ராஷ்மி

விஜய் தேவரகொண்டாவின் கீத கோவிந்தம் படம் மூலம் பிரபலமானவர் கன்னட நடிகையான ரஷ்மிகா மந்தனா. ரஷ்மிகா பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் கார்த்தி 19 படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் ஆகிறார்.  அனில் ரவிபுடி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ரஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ரஷ்மிகா. வாய்ப்புகள் வந்து குவியும் இந்த நேரத்தில் ரஷ்மிகா தனது சம்பளத்தை உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது. ரஷ்மிகா படம் ஒன்றுக்கு ரூ. 40 லட்சம் வாங்கி வந்தார். தனக்கு மவுசு அதிகரித்துள்ளதால் தற்போது ரூ. 60 லட்சம் முதல் ரூ. 80 லட்சம் வரை கேட்கிறாராம். டோலிவுட்டில் இன்னும் வளரவே இல்லை அதற்குள் சம்பளத்தை உயர்த்துவதா என்று பேசப்படுகிறது.