சம்மர் டிரிப்புக்கு பெஸ்ட் சாய்ஸ் பிரெண்ட்ஸ் மட்டும்தான் !

தமிழ்நாட்டில் வெயில் மக்களை வறுத்து எடுக்கிறது. நடிகைகள் கோடை வந்தாலே குளிர் பிரதேசங்களுக்கு பறந்து விடுவார்கள். சஞ்சிதா ஷெட்டி வட இந்தியாவுக்கு பயணம் சென்று இருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், கோடைகாலத்தில் படப்பிடிப்பு இருந்தாலும் இல்லை என்றாலும் ஒரு பயணம் கண்டிப்பாக இருக்கும். கோடை தொடங்கி விட்டால் கொஞ்சம் குளிரான பகுதியை பார்த்து செட்டில் ஆகிவிடுவேன்.
இருக்கும் பணத்தை பொறுத்துதான் அந்த ஆண்டுக்கான இடத்தை தேர்வு செய்வேன். என்னோட சம்மர் டிரிப்புக்கு எப்போதும் என்னோட தோழிகள் தான் பெஸ்ட் பார்ட்னர்ஸ். பிளைட் டிக்கெட் ஆறுமாசத்துக்கு முன்னாடியே புக் பண்ணினால் விலை குறைவு என்பதால் எந்த டிரிப்புக்கும் ஆறுமாதத்துக்கு முன்பே பிளான் பண்ணிருவேன். இந்த வருடம் வட இந்தியாவில் இருக்கும் மலைப்பிரதேசங்களுக்கு பள்ளி, கல்லூரி தோழிகள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து வந்து இருக்கிறோம்’ இவ்வாறு அவர் கூறினார்.