சரத்குமார்-சசிகுமார் இணையும் புதிய படம்

சசிகுமார் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கிறார். காரணம், அவருடைய படங்கள் எப்போதும் குடும்பம் மற்றும் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகின்றன. அவருடன் சரத்குமார், டைரக்டர் பாரதிராஜா ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. சசிகுமார் கதாநாயகனாக  நடிக்கிறார். ‘சலீம்’ படத்தை இயக்கிய நிர்மல்குமார் டைரக்டு செய்கிறார். பி.கே.ராம்மோகன் தயாரிக்கிறார். முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது, தொடர்ந்து மும்பை, தேனி ஆகிய இடங்களில் படம் வளர இருக்கிறது.