சரித்திர கதைகளில் ஆர்வம் காட்டும் மலையாள நடிகர்கள் !

பாகுபலி வெற்றிக்கு பிறகு மலையாளத்தில் அதிகமான சரித்திர, புராண படங்கள் தயாராகின்றன. மகாபாரதம் என்னும் மகா காவியத்தில் கர்ணன் கதாபாத்திரத்தில் பிரித்விராஜூம், பீமன் கதாபாத்திரத்தில் மோகன்லாழும் நடிக்கவிருக்கின்றனர். இதுபோல் மம்முட்டி ‘மாமாங்கம்’ என்ற சரித்திர கதையில் நடிக்கிறார். கேரளாவில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற மாமாங்கம் திருவிழாவை மையமாக வைத்து இந்த படம் உருவாகிறது. மலபாரை சேர்ந்த போர் வீரனை பற்றிய கதை. இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.