சர்ச்சைக்குரிய அமலா பாலின் ஆடை படத்தின் மற்றுமொரு ட்ரைலர் இன்று வெளியீடு !

ரத்னகுமார் இயக்கிய ‘ஆடை’ படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார். தமிழ் படங்களில் எந்த நடிகையும் இதுபோல் துணிச்சலாக நடித்தது இல்லை. சமீபத்தில் வெளியான படத்தின் டிரெய்லரில் அமலாபால் ஆடை இல்லாமல் நடித்த காட்சிகள் இருந்தன. சமூக வலைத் தளத்தில் இந்த டிரெய்லரை அதிகமானோர் பார்த்தனர். பாலின் துணிச்சலுக்கு வலைத்தளத்தில் பாராட்டும் எதிர்ப்புகளும் கிளம்பின. இதனால் பரபரப்பான எதிர்பார்ப்பில் இருக்கும் ‘ஆடை’ படம் இன்னும் 2 வாரத்தில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் இன்னொரு டிரெய்லரை இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தவரும், பிரபல இந்தி இயக்குனருமான அனுராக் காஷ்யப் சமூக வலைத்தளத்தில் இன்று வெளியிடுகிறார்.