சர்ச்சையான சம்பவத்தை மையப்படுத்தும் படத்தில் ஷ்யாம் !

ஷ்யாம் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் காவியன். உலகிலே அதிகம் துப்பாக்கி வைத்திருப்போர் பட்டியலில் முதல் இடம் அமெரிக்காவுக்குத் தான். அந்த அமெரிக்கத் துப்பாக்கிச் சூட்டில் அதிகம் பலியாவது இந்தியர்கள் தான். இப்படி ஒரு அதிர்ச்சிகலந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்துத்தான் காவியன் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இப்படத்தை 2M சினிமாஸ்க்காக K.V சபரிஷ் தயாரிக்கிறார். மனம் கொத்திப் பறவை படத்தில் அறிமுகமான அத்மையா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் ஸ்ரீதேவி குமாரும் மற்றொரு ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். முக்கியக் கதாப்பாத்திரத்தில் ஸ்ரீநாத் நடிக்க, ஹாலிவுட்டில் இருந்து ஜெஸ்டின் விகாஷ், லூக்கஸ், ஜெனிபர் ஆகிய  நடிகர்களும் படத்தில் பங்கேற்கிறார்கள். விறுவிறுப்பான இக்கதையை அழகான திரைக்கதையாக்கி இயக்கி இருப்பவர் சாரதி. ஒளிப்பதிவு மூலம் படத்தில் தனிக்கவனம் செலுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் N.S. இந்தியத் தொழிநுட்பக் கலைஞர்களோடு ஹாலிவுட் கலைஞர்களும் பங்கெடுத்துள்ள இப்படம் இம்மாதம் 18-ம் தேதி வெளியாக இருக்கிறது.  உலகெங்கும் SDC பிக்ச்சர்ஸ் இப்படத்தை வெளியீடுகிறது.