சர்ச்சையில் சிக்கவிரும்பாத நடிகை ரைசா !

பியார் பிரேமா காதல் படத்தில் நவநாகரீக பெண்ணாக நடித்தவர் ரைசா. அப்படத்தில் ஹீரோவுடன் முத்தக்காட்சி, பெட்ரூம் காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது அலைஸ், காதலிக்க யாருமில்லை படங்களில் நடிக்கிறார். சில ஹீரோயின்கள் திரையுலகினர், ரசிகர்களின் கவனத்தை கவர சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கூறுவதுடன், கவர்ச்சி படங்கள் வெளியிடுகின்றனர். ரைசாவை பொருத்தவரை கவர்ச்சி படங்கள் வெளியிட்டாலும் சர்ச்சைகளில் சிக்கக்கூடாது என்று கவனமாக இருக்கிறார். எதிர்மறை கருத்துக்கள் பேசினால்தான் சர்ச்சை வரும் என்பதால் பாசிடிவான வகையிலேயே தனது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் சினிமா துறையில் நீங்கள் திருமணம் செய்ய நினைக்கும் நடிகர் யார் என்று கேட்டபோது,’விஜய் மற்றும் விஜய்தேவரகொண்டா ஆகிய இருவரையும் நான் காதலிக்கிறேன்’ என்றார்.