Cine Bits
சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்!
ஒரு நாள் கூத்து படத்தில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றார். சாமி கும்பிட்டுவிட்டு கையில் பிரசாதத்துடனும், கோவில் தெப்பக்குளம் அருகில் உட்கார்ந்தும் சில புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடுமையான சோதனைக்கு பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிப்படுகிறார்கள். இதையும் மீறி நிவேதா பெத்துராஜ் கோவிலுக்குள் செல்போனை கொண்டு சென்று புகைப்படம் எடுத்ததை பலரும் கண்டித்து வருகிறார்கள்.