சர்ச்சையில் சிக்கிய போனிகபூர் !

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல தயாரிப்பாளருமான போனிகபூர், இந்தி நடிகை ஊர்வசி ரவ்தெலா மற்றும் நடிகர்கள் பலர் மும்பையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அவர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுத்தபோது ஊர்வசி ரவ்தெலாவின் பின்பகுதியில் போனிகபூர் கையால் தட்டினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவை பார்த்தவர்கள் மகள் வயது பெண்ணை இப்படி செய்யலாமா என்று போனிகபூரை விளாசினார்கள். பின்னால் தட்டியதும் ஊர்வசி ரவ்தெலா முகம் மாறிவிட்டது.