சர்ச்சையில் சிக்கி வரும் ஹன்சிகா, ஓவியா – போலீஸ் விசாரிக்க முடிவு!

ஹன்சிகாவின் ‘மகா’, ஓவியாவின் ‘90 எம்.எல்’ படங்களும் பிரச்சினையில் சிக்கி உள்ளன. ‘மகா’ படத்தில் ஹன்சிகா காவி உடையில் பெண் சாமியாராக கஞ்சா புகைக்கும் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டனர், பின்னணியில் காசி கோவில் இருந்தது. இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகைப்படம் இந்து மதத்தை அவமதிப்பதுபோல் உள்ளதாகவும், எனவே ஹன்சிகா உள்ளிட்ட படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுபோல் ஓவியா நடித்து திரைக்கு வந்துள்ள ‘90 எம்.எல்.’ படத்தில், பெண்கள் மது அருந்தி, புகைப்பிடிக்கும் காட்சிகளும் படுக்கை அறை காட்சிகளும் அதிகம் உள்ளது என்றும், எனவே படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து ஹன்சிகா, ஓவியாவிடம் விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.