சர்வதேச அங்கீகாரம் பெற்ற விஜய் சேதுபதி படம்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இந்தாண்டு இதுவரை 5 படங்கள் வெளியாகியுள்ளன.5 படத்தில் ​ஒரு படம் மட்டும் சருக்களை சந்தித்தது. அதுவும் சமீபத்தில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து சிலவாரங்களில் வெளிவந்த​ தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க என 3 படங்கள் இப்போதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் விஜய் சேதுபதி தயாரித்த படம் ஒன்று சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது.  இந்தியாவில் கோவா சர்வதேச திரைப்பட விழாவிற்கு பிறகு மிகவும் பிரசித்தி பெற்றது கேரள சர்வதேச திரைப்பட விழா. கேரளாவில் 21வது சர்வதேச திரைப்பட விழா நடைபெற இருக்கிறது.

இந்தப்பட விழாவில் விஜய் சேதுபதி தயாரித்த, 'மேற்கு தொடர்ச்சி மலை' படம் தேர்வாகியுள்ளது. இப்படத்தை சுசீந்திரனிடம் உதவியாளராக பணியாற்றிய லெனின் பாரதி இயக்கியிருக்கிறார். இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.இந்நிலையில்  தான் தயாரித்த படம் ஒன்று சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியிருப்பதை என்னி விஜய் சேதுபதி மகிழ்ச்சியில் உள்ளார்.