சர்வதேச நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் வெள்ளிப்பதக்கம் !

நடிகர் மாதவன்-சரிதா தம்பதியின் 14 வயது மகன் வேதாந்த். இவர்  நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2-ம் குழு நீச்சல் போட்டியில் 4 x 100 மீட்டர் ரிலேவில் ப்ரீஸ்டைல் நீச்சல் பிரிவில் வேதாந்த், உத்கார்ஷ் பாட்டீஸ், சாஹில் லஸ்கர், ஷோவான் கங்குலி ஆகிய 4 பேர் இந்தியா சார்பில் பங்கேற்றனர். ஏற்கெனவே தேசிய அளவில் 100 மீட்டர் நீச்சல் பந்தயத்தில் தங்கம் வென்ற வேதாந்த், கடந்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் அதே பிரிவில் வெண்கலம் வென்றார். இந்த வெற்றிகளை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் மாதவன் தற்போது, இந்தியா சார்பில் சர்வதேச அரங்கில் பிரதிநிதியாகப் பங்கேற்று இந்தியத் தாய்க்கு வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுத் தந்திருப்பதாக தன் மகன் குறித்து பெருமையாகப் பதிவிட்டுள்ளார்.