சர்வதேச படவிழாவில் இடம் பெரும் உதயநிதி ஸ்டாலின் திரைப்படம்

சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் வெளியான திரைப்படம்  'கண்ணே கலைமானே'.  இயற்கை விவசாயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் விவசாயியாக நடித்திருந்தார். தமன்னா வங்கி அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்திற்கு பல்வேறு விருதுகளும் கிடைத்துள்ளன. இந்நிலையில், 'கண்ணே கலைமானே' படம் கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் விருது பெற உள்ளதாக இப்படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.