Cine Bits
சர்வதேச பிரச்சனை பற்றி பேசும் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் !

விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், இயக்குனர் மகிழ்திருமேனி, கனிகா, ரித்விகா, சிவரஞ்சனி நடிக்கும் படத்துக்கு, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒளிப்பதிவு, வெற்றிவேல் மகேந்திரன். இசை, நிவாஸ் கே.பிரசன்னா. தயாரிப்பு இசக்கி துரை, ஆர்.கே.அஜய்குமார். பேராண்மை, புறம்போக்கு ஆகிய படங்களில் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவியாளராக பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்குகிறார்.
அவர் கூறுகையில், ‘கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதல், இசை ஆகிய கொண்டாட்டங்களை உள்ளடக்கிய கதை இது. முக்கியமான ஒரு சர்வதேச பிரச்னையை பற்றி பேசும் இப்படத்தில், இசைக்கலைஞர் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்’ என்றார்.