Cine Bits
சற்குணத்துடன் மீண்டும் இணையும் விமல்!

சற்குணம் இயக்கிய களவாணி படத்தில் நாயகனாக நடித்தவர் விமல். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதையடுத்து வாகை சூடவா படத்திலும் நடித்தார் விமல். தேசிய விருது பெற்ற அந்த படம் விமல் பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் படமாக அமைந்துள்ளது.அதையடுத்து தனுஷ், அதர்வா வைத்து இயக்கிய சற்குணம்,தற்போது நயன்தாரா நடிப்பில் டோரா படத்தை தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது அவர் ஒரு படத்தை இயக்கப்போகிறார். இந்த படத்தில் நடிக்க தனுஷிடம் கால்சீட் கேட்டபோது, அவர் சில படங்கள் கைவசம் இருப்பதாக சொல்லி விட்டாராம்.அதேபோல் அதர்வாவும் சொல்லி விட்டாராம், மீண்டும் விமலை வைத்தே ஒரு படத்தை இயக்குவதாக முடிவெடுத்துள்ளார் சற்குணம். களவாணியில், விமலுடன் சூரியும் இணைந்தது பெரிய அளவில் ஒர்கவுட் ஆனதால் இந்த புதிய படத்தில் மீண்டும் விமல்-சூரியை இணைக்க முடிவெடுத்துள்ளாராம்.