சல்மான் கான் தயாரிப்பில் “லவ்ராத்திரி” படம்…

நடிகர் சல்மான் கான் தயாரிக்க உள்ள “லவ்ராத்திரி” என்ற படத்தை அபிராஜ் மினாவாலா இயக்க உள்ளார். இதில் சல்மான் கான் தங்கையின் கணவர் ஆயுஸ் சர்மாவும், ஹீரோயினாக வாரினா ஹீசைன் அறிமுகமாகியுள்ளார். அவர் தன் ட்விட்டரில் “இறுதியாக லவ்ராத்திரி படத்திற்கான ஹீரோயினியை கண்டுபிடித்துவிட்டேன். அவர் மாடலிங் மற்றும்  ஏராளமான விளம்பர படங்களில்  நடித்துள்ளார் என்றும், இந்த படத்தில் ஹீரோ குஜராத்தி பையனாகவும், ஹீரோயினி பேலட் டான்ஸராகவும் நடிக்கின்றனர். இது காதல் கதையில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது என்று கூறியுள்ளார்.