சல்மான் கான் ரேஸ் -3,கிக் 2, பாரத் படங்களில் நடிக உள்ளார்.

சல்மான் கான் ரேஸ் -3, கிக் 2, பாரத் என அடுத்தடுத்த படங்கள் அவர் நடிப்பில் உருவாக உள்ளது. அவர் தற்போது ரேஸ் 3 படத்தில் பாபி தியோலுடன் இணைந்து  நடிக்கின்றார். இதில் பாபி தியோல் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார் இவரது நடிப்பை பார்த்து வியந்த சல்மான் அலி அப்பாஸ் ஜாபர் இயக்கும் “பாரத்” படத்தை அதுல் அக்னிகோத்ரி மற்றும் பூஷண் குமார் இணைந்து தயாரிக்கின்ற படத்தில் அவரை இந்த படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு அவரும் சம்மதம் சொல்லிவிட்டார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு ஆரம்பமாகி அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகையில் படத்தை வெளியீடு செய்ய உள்ளார்  என்பது தெரிகிறது.