சாதனை சிறுவனை தன் இசை பள்ளியின் தூதுவராக நியமித்தார் ஏ.ஆர்.ரகுமான்!

அமெரிக்காவில் நடந்த “ரியாலிட்டி ஷோ” ஒன்றில் சென்னையை சேர்ந்த சிறுவன் லிடியன் நாதஸ்வரம் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் நிமிடத்திற்கு '325 பீட்ஸ் பியானோ' வாசித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதி போட்டியில் இரண்டு பியானோக்களை வாசித்து “உலகில் சிறந்தவர்” என்ற பட்டத்துடன் ஏழு கோடி ரூபாய் பரிசு தொகையையும் வென்றார். லிடியன் ஏ.ஆர்.ரகுமானின் இசைப் பள்ளியில் பயின்றவர். சமீபத்தில் லிடியனை அழைத்து பாராட்டிய ஏ.ஆர்.ரகுமான் “லிடியனின் வெற்றி இந்தியாவின் வெற்றி” என புகழ்ந்தார். லிடியனை தன் இசைப்பள்ளியின் துாதராகவும் ஏ.ஆர்.ரகுமான் நியமித்துள்ளார்.
உலகளவில் சாதனை படைத்த தமிழக சிறுவனுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் புகழாரம் சூட்டியுள்ளார்.