சாந்தனுவை ஹிந்தியில் திட்டி அவமானப்படுத்திய விமான பணிப்பெண்கள் !

இயக்குனரும் நடிகருமான பாக்யராஜின் மகனுமான நடிகர் சாந்தனு. இவர் பலப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவரது படங்கள் பெரியளவில் வெற்றியடையவில்லை. இவர் விஜய்யின் தீவிர ரசிகர் ஆவார். தற்சமயம் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் அவருடன் இணைந்து நடித்துவருகிறார். இதற்கிடையில் சமீபத்தில் விமானநிலையத்தில் தன்னை சங்கடப்படுத்திய நிகழ்வை நம்மிடையே கூறினார். சென்னை விமான நிலையத்தில் லக்கேஜ் ஸ்கிரீனிங்கிற்காக தான் வரிசையில் காத்திருந்தபோது, ஏர் இந்தியா விமான பணிப்பெண்கள் மூன்று பேர் வரிசையில் நிற்காமல் அத்துமீறி சென்று க்கேஜ் ஸ்கிரீனிங் செய்ததாகவும், அது குறித்து தான் கேட்டபொழுது தன்னை மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தங்களை எதுவும் செய்ய முடியாது என்ற தலைக்கனத்தில் அவர்கள் நடந்துகொண்டதாகவும் சாந்தனு கூறியுள்ளார்.