சாமி 2 படத்தில் நடிக்க இஷ்டமே இல்லை: அதிர்ச்சியளித்த ஐஸ்வர்யா ராஜேஷ் !

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த சாமி 2 படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தார். சாமி படத்தில் நடித்த த்ரிஷா தான் 2ம் பாகத்திலும் நடிப்பதாக இருந்தது. அதன் பிறகு அவர் படத்தில் இருந்து வெளியேறியதால் ஐஸ்வர்யா ராஜேஷை நடிக்க வைத்தார் ஹரி. எனக்கு சாமி 2 படத்தில் நடிக்க விருப்பமே இல்லை. என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டதால் நடிக்க ஒப்புக் கொண்டேன். முதல் பாகத்தில் த்ரிஷா நடித்த புவனா கதாபாத்திரத்தில் நடிக்க யாரும் விரும்பவில்லை. சாமி பட மாமி என்றாலே அது த்ரிஷா தான் என்று ரசிகர்கள் மனதில் பதிந்துவிட்டது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் புவனா மாமி கதாபாத்திரத்தில் நடித்தது வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் தான் ஐஸ்வர்யா அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார்.