சாமி -2 படத்தில் வில்லன் பாத்திரத்திற்கு முன்னணி நடிகரை பேச்சு வார்த்தை

இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்து மெகா ஹிட் ஆன படம் சாமி. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ரெடியாகி வருகிறது. இப்படத்தில் த்ரிஷா மட்டுமின்றி கீர்த்தி சுரேஷும் நடிக்கவுள்ளார். தற்போது இப்படத்தில் வில்லனாக நடிக்க பாபி சிம்ஹாவுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம். அவரும் எப்படியும் சம்மதித்துவிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்க, இருமுகன் படத்தை தயாரித்த ஷிபுதமீன்ஸே இப்படத்தையும் தயாரிக்கவுள்ளார்.