சாய் பல்லவி மீது நடிகர் நாக சவுரியா புகார் கூறியுள்ளார்…

நடிகை சாய் பல்லவி “கரு” தமிழ் படத்திலும்,அதே படம் தெலுங்கில் “கனம்” என்ற பெயரில் ஒரே நேரத்தில் தயாராகும் படத்தில் நடித்து வருகிறார். அதில் அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகர் நாக சவுரியா நடிக்கிறார். இந்த படப்பிடிப்பின் போது இந்த நடிகை தனக்கு இடையூறு செய்து, மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கதறி அழாத குறையாக புகார் கூறியுள்ளார். ஆனால் அதற்கு அந்த நடிகை “அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை என்றும், அவர் ஏன் இப்படி கூறினார் என்று தெரியவில்லை” என்று “டேக் இட் ஈசியாக” கூறியுள்ளார். ஆனாலும் ஹீரோவிற்கு நடிகை மீதிருந்த கோபம் தீரவில்லை போலிருக்கிறது. சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த “கனம்” படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் ஹீரோ கலந்துக்கவில்லை. இதனை கேள்வி பட்ட தெலுங்கு ஹீரோக்கள், அந்த பெண்ணு அந்த அளவுக்கு ஹீரோவை மன உளைச்சலை ஏற்படுத்தியது” என்று ஆச்சரியத்துடன் பேசி வருகின்றனர்.