சாவுத்திரியின் சரித்திர படத்தில் சமந்தா!

சமந்தா தமிழ், தெலுங்கு படங்களில் டாப் ஹீரோயினாக கலக்கிக்கொண்டிருக்கிறார்.காதல் ஒரு பக்கம் இருந்தாலும் படங்களிலும் கமிட்டாகிகொண்டிருக்கிறார்.இந்நிலையில் 1950, 60 களில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என பல முன்னனி நடிகர்களோடு நடித்தவர் மறைந்த பழம் பெரும் நடிகை சாவித்திரி.

ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்த​ இவர் சம்பாதித்த அனைத்து பணத்தையும் பின்னாளில் படம் தயாரிக்கிறேன் என்று இழந்தார்.சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை தற்போது தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கவுள்ளார் இப்படத்திற்கு நடிகை சமந்தாவை ஒப்பந்தம் செய்துள்ளாராம்.

இதற்காக சமந்தா அந்த நடிகையின் திரைப்படங்கள், வாழ்க்கை வரலாறு என புரட்டிப்பார்த்து நடை, உடை, பாவனை என சாவித்திரி போலவே மாறிவிட்டாராம்.இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் விரைவில் படமாக்கவுள்ளது.