சாஹூ முடிந்ததும் திருமணத்தை அறிவிக்கிறார் பிரபாஸ்!

பாகுபலி 2 படத்துக்கு பிறகு சாஹூ படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். இதில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். அருண் விஜய், நீல் நிதின் முகேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் படம் வெளியாக உள்ளது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆகஸ்ட் 15ம் தேதி படம் திரைக்கு வர உள்ளது. இதற்கிடையே பிரபாஷ், அனுஷ்கா காதல் கிசு கிசு தொடர்ந்து சினிமா வட்டாரத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் பிரபாசின் அங்கிள் கிருஷ்ணம் ராஜு நிருபர்களிடம் கூறும்போது, ‘சாஹூ படம் முடிந்ததும் பிரபாசின் திருமண அறிவிப்பு வெளியாகும்’ என்றார். இது டோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.