“சாஹோ” படத்தின் ரகசியங்கள் வெளியாகிறது…
பிரபாஸ் பாகுபலி- 2 படத்திற்கு பிறகு “சாஹோ” படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என நன்கு மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை ஹிந்தி ரசிகர்களையும் கருத்தில் கொண்டு பாலிவுட்டில் பிரபல நட்சத்திரங்களான ஸ்ரத்தா கபூர், நீல்நிதின் முகேஷ் உள்பட ஐந்து பேர் நடித்து வருகின்றனர். இந்த நட்சத்திரங்களால் படக்குழுவினருக்கு அவ்வப்போது சங்கடங்கள் ஏற்படுகிறது. குறிப்பாக படம் பற்றிய தகவல்களை வெளியே கசிய விடுகிறார்கள். இந்த படத்தில் ஸ்ரத்தா கபூர் பிரபாஸுடன் சக போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் தகவலை சமீபத்தில் கசிய விட்டார். அதே போல் நீல்நிதின் முகேஷ் இந்த படம் மசாலா படம் அல்ல என்றும், த்ரில்லர் படம் என்றும் வெளிப்படையாக கூறி வருகிறார். இந்த விஷயங்கள் கசிவதால் படக்குழுவினருக்கு சங்கடம் ஏற்படுகிறது. ஆனால் பிரபாஸ் ரசிகர்கள் இதனால் மகிழ்ச்சியாக உள்ளனர்.