சாஹோ படத்திற்கு இசை – ஜிப்ரான்

பாகுபலி வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘சாஹோ’. இந்த படத்திற்கு இசையமைப்பாளர்களாக ஒப்பந்தமாகி இருந்த சங்கர்-எஹ்ஸான்-லாய் படத்தில் இருந்து சமீபத்தில் விலகினர். இதையடுத்து இந்த படத்திற்கு இசையமைக்க வேறு இசையமைப்பாளர்களை படக்குழு தேடி வந்தது. இந்த நிலையில், படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஜிப்ரான் பின்னணி இசையை மட்டும் கவனிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. பாடல்களுக்கு வேறு சில இசையமைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.