சிங்கத்துக்கு டப்பிங் கொடுக்கும் ஷாரூக் கான் அவரது மகன் ஆர்யன் !

அனிமேஷன் படங்களை உயர்ந்த தொழில்நுட்பத்தின் மூலம் மிக லைவாக படங்களை ஹாலிவுட்டில் உருவாக்கி வருகின்றனர். அதில் ஒரு முயற்சிதான்  ‘ஜங்கிள் புக்’ படத்தை இயக்கிய பேவ்ரூதான் தற்போது  ‘தி லைன் கிங்’ படத்தையும் இயக்கியுள்ளார். இது அடுத்த மாதம் வெளியாக உள்ளது.இந்நிலையில், டிஸ்னியின் மிக பிரமாண்டமான லைவ் ஆக்ஷன் படமான  ‘தி லைன் கிங்’ படத்துக்கு பின்னணி குரல் கொடுக்க முன்வந்திருக்கிறார் ஷாரூக் கான். மற்றும் அவரது மகன் ஆர்யன். ஷாரூக் கான்,  லையன் முபாசாவுக்காக குரல் கொடுக்கிறார். முபாசாவின் மகனும், முக்கிய கதாபாத்திரமுமான சிம்பாவுக்காக ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் குரல் கொடுக்கிறார்.
 வருகின்ற ஜூலை 19ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் மிக பிரமாண்டமாக வெளியாகிறது.