சிங்கப்பூரில் நடைபெறவிருந்த இசைநிகழ்ச்சி யுவனின் அனுமதிபெறாமல் ஒத்திவைப்பு !

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வரும் 13ஆம் தேதி சிங்கப்பூரில் இசை பிலாடி நடத்த ஒப்புக்கொண்டிருந்தார். கடந்த மாதம் முதல் இதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. ரசிகர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்ப்பில் யுவனின் இசைக்காக காத்திருந்தனர். இந்த நிலையில் நடக்கவிருந்த யுவனின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது யுவன் ஷங்கர் ராஜாவுடன் கலந்து ஆலோசிக்காமலேயே இந்த நிகழ்ச்சியை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் ரத்து செய்ததை அறிவித்தனர். இந்நிகழ்வுபற்றி யுவன் தன் அறிக்கையில் இசை நிகழ்வுக்காக ஆடிட்டோரியங்களில் குவியும் ரசிகர்களுக்கான எனது அர்ப்பணிப்பு அப்படியே இருக்கிறது. தவிர்க்கவே முடியாத சட்டம் ஒழுங்கு பிரச்சினை அல்லது இயற்கை பேரழிவு பாதிப்பு இன்றி, எந்தவொரு நிகழ்வையும் ஒத்திவைக்கும் யோசனையை நான் எந்த நிலையிலும் ஊக்குவிப்பதே இல்லை. நிகழ்ச்சி அமைப்பாளர்கள் நிகழ்ச்சியை ஒத்தி வைப்பது குறித்து எங்களுக்கு அறிவிக்க எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை என்பது துரதிருஷ்டவசமானது என கூறியுள்ளார்.