சிங்கப்பூர் அருங்காட்சியத்தில் மெழுகு சிலையாக மாறவிருக்கும் காஜல் அகர்வால் !

பிரபல மேடம் டுசார்ட்ஸ், சிங்கப்பூர் அருங்காட்சியத்தில் காஜல் அகர்வாலின் சிலை நிறுவப்படவுள்ளது. இதற்கான அளவீடுகளை அழகும் பணியில் கலந்துகொண்ட காஜல் அகர்வால் அதுபற்றி நம்மிடையே பெருமையுடன் கூறுகையில், சிங்கப்பூரில் மேடம் டுசார்ட்ஸ் மியூசியத்தில் எனது சொந்த மெழுகு சிலையை திறப்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். 2020-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி எனது சிலையை அறிமுகப்படுத்துகிறேன். சிறுவயதில் அங்கு சென்றது இன்னும் என் நியாபகத்தில் உள்ளது. அங்கு பலவற்றை பார்த்து வியப்படைந்திருக்கிறேன். இப்போது அதில் நானும் ஒன்றாக இருக்கப்போவதில் பெரும் மகிழ்ச்சி. இவ்வாறாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.